உண்டபின் வெற்றிலைபாக்கு அயிலுதல்
 
583.பண்ணும் இவுளிச் செவிச்சுருளும்
      பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
கண்ணின் மணியிற் சுண்ணாம்பும்
     கலந்து மடித்துத் தின்னீரே.

     (பொ-நி.)  இவுளிச்   செவிச்சுருளும்,  பரட்டிற்  பிளவும் கண்ணின்
மணியின்  சுண்ணாம்பும்  கலந்து  மடித்துத்  தின்னீர்  (எ-று.)

     
(வி-ம்.) பண்ணுதல்-அழகு செய்தல். இவுளி-குதிரை.சுருள்-வெற்றிலை.
பரடு-கணைக்கால் (குளம்பு.)பிளவு-வெட்டுப்பாக்கு. மணி- வெண்மணி. கலந்து
-ஒன்று சேர்த்து. போரில்! இறந்த  குதிரைக் காதுகளாகிய வெற்றிலை, அதன்
கால்   குளம்   பின்   துண்டுகளாகிய   வெட்டுப்பாக்கு,  போர்வீரர்களின்
கண்மணியாகிய சுண்ணாம்பு  இவை  கலந்து  மடித்துத்  தின்னுங்கள் எனப்
பேய்கள்   உண்டது.   செரித்தற்கு  வெற்றிலைச்  சுருள்  உண்டு களிப்பது
கூறிற்றென்க.                                                 (112)