பேருண்டி கொண்ட குற்றமொழிய மருந்து 584. | பெருக்கத் தின்றீர் தாம்பூலம் | | பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே. | (பொ-நி.) தின்றீர்! பிழைக்கத் தாம்பூலம் செய்தீர்! பிழைப்பீரே! பேய்காள்! பூதத்தின் மயிரை மோவீர்! (எ-று.) (வி-ம்.) பிழைக்க-பேருண்டி கொண்ட குற்றத்தினின்றும் பிழைக்க. தாம்பூலம் செய்தீர்- வெற்றிலை பாக்கயின்றீர். பிழைப்பீரே-(இதனால் அப் பெருங்குற்றம் ஒழிந்து) பிழைப்பீரே. செருக்கும் - களிக்கின்ற. சிரம் -தலை. மோவீர்-மோந்துபாரீர். பேருண்டி உண்பார்க்கு வாய்நீர் ஊறிக் குமட்டல்வருவது இயல்பு. அதுதீர மயிரை மோந்து பார்ப்பது மருத்துவ முறை. எனவே பூதத்தின் தலைமயிரை முகந்து பார்க்கக் கூறிற்று. (113) |