பேய்கள் களித்துக் கூத்தாடல்
 
585.என்றுக ளித்துக் குமண்டையிட்டே
       ஏப்ப மிட்டுப் பருத்துநின்ற
குன்றுகு னிப்பன போற்களத்துக்
      கும்பிட் டேநட மிட்டனவே

     (பொ-நி.)  களித்து,   குமண்டையிட்டு,  ஏப்பமிட்டுப்பருத்து நின்ற
குன்று  குனிப்பனபோல்,  கும்பிட்டு  நடமிட்டன  (எ-று.)

     
(வி-ம்.) குமண்டையிடுதல் - மகிழ்ச்சியால்  கூத்தாடல் பருத்துநின்ற.
பருத்துநின்ற    பேய்கள். குன்று - மலை.  குனித்தல் - கூத்தாடுதல். களம்
-போர்க்களம்.   நடமிட்டன  - கூத்தாடின.  தின்று  பருத்ததால்  பேய்கள்
மலைபோற் காட்சியளித்தன ஆகலின்,'குன்று குனிப்பனபோல்' என்றார். (114)