இதுவும் அது
 

586.வாசிகி டக்கக் கலிங்கரோட
       மானதன் ஏவிய சேனைவீரர்
தூசியெ ழுந்தமை பாடி நின்று
      தூசியும் இட்டுநின் றாடினவே.

     (பொ-நி.) கலிங்கர்  ஓட  ஏவிய   சேனைவீரர்   தூசி  எழுந்தமை 
பாடி  நின்று,  ஆடின;  (எ-று.)

     
(வி-ம்.)  வாசி  - குதிரை.  கிடக்க  -   களத்தே   வீழ்ந்துகிடக்க. 
மானதன்-குலோத்துங்கன்.  தூசி - முன்னணிப்படை.  தூசி-(மேல்)்  ஆடை. 
மகிழ்ச்சியால் மேலாடையையும்  வீசி  எறிந்து  ஆடின  என்க. தூசு, தூசி
என்றாயிற்று. களிப்பு  மிகுந்தால்  உடுத்த  ஆடையையும் அவிழ்த்து  வீசி
ஆடுவது  இயல்பு. ஆகலான்,பேய்கள் தம் ஆடைகளை வீசி நின்று ஆடின
என்க.'தேவர் எல்லாரும் தூசி நீக்கி ஆடலால்' எனவரும் கம்பர் மொழியும்
ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.                                  (115)