இதுவும் அது

587.பொருகை தவிர்ந்து கலிங்கரோடப்
       போக புரந்தரன் விட்டதண்டின்
இருகையும் வென்றதோர் வென்றிபாடி
     இருகையும் வீசிநின் றாடினவே.

      (பொ-நி.)தண்டின், கலிங்கர் ஓட, வென்றதோர் வென்றி பாடி ஆடின; (எ-று.)

     (வி-ம்.)  பொருகை -  போர்செய்தல்.   போகம் - பல்வகைச்செல்வ நுகர்ச்சிகளையுடைய.  புரந்தரன் - இந்திரன் போன்ற குலோத்துங்கன். தண்டு
-சேனை.  தண்டின் இருகையும் - படையின் இருகையும். இருகையும்-பேய்கள் தம்முடைய இரண்டு கைகளும்;  வீசிநின்று - மேலேயெடுத்து  வீசிக்கொண்டு நின்று.                                                     (116)