இதுவும் அது
 
589.உருவிய சுரிகையொ டுயர்கணை விடுபடை
       உருள்வடி விதுவென உருள்வன சிலசில
வெருவிய விடுநர்தம் உடைவடி விதுவென
     விரிதலை யதனொடு மறிவன சிலசில

     (பொ-நி.) உருள்வன சிலசில;  விரிதலையதனொடு  மறிவன சிலசில;
(எ-று.)

     (வி-ம்.)   சுரிகை  -  உடைவாள்.  கணை  - அம்பு. படை -(பிற)
போர்க்கருவிகள்.  உருள்  வடிவு - நிலத்தில் புரளும் தோற்றம். வெருவுதல்
-அஞ்சல். அடுநர்-(கலிங்க) வீரர்.  உடை  வடிவு - தோற்றோடிய  தன்மை.
விரிதலை-விரித்த தலைமயிர்;ஆகுபெயர்.மறிவன-முதுகுகாட்டி ஓடுவன. (118)