காவிரியை ஒப்புக்கூறி விளித்தது 59. | பூவிரி மதுகரம் நுகரவும் | | பொருகயல் இருகரை புரளவும் காவிரி எனவரும் மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ. |
(பொ-நி.) மதுகரம் நுகரவும், கயல் கரை புரளவும் காவிரி எனவரு மடநலீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) பூவிரி - அழகுமிக்க; மலர்கள் செறிந்த. மதுகரம் நுகர- தேனைக் கையால் நுகர; வண்டு உண்ண. கயல் - மீன் போன்ற கண்; மீன் கரை - அகன்ற கண்ணின் இரு கடை, காவிரியின் கரை. காவிரி- காவிரியாறு. கனகம்-பொன். பெண்களுக்கும் காவிரிக்குஞ் சிலேடை. (39) |