பேய்கள் குலோத்துங்கனை வாழ்த்தல் | 590. | உபய மெனும்பிறப் பாளர்ஏத்த | | | உரைத்த கலிங்கர் தமைவென்ற அபயன் அருளினைப் பாடினவே அணிசெறி தோளினை வாழ்த்தினவே. |
(பொ-நி.) பிறப்பாளர் ஏத்த வென்ற அபயன் அருளினைப் பாடின; தோளினை வாழ்த்தின; (எ-று.) (வி-ம்.) உபயம் எனும் பிறப்பாளர்- இருபிறப்பாளர். அணி -அழகு; வாகுவலையம் முதலிய அணிகள். செறி-பொருந்திய. (119) |