இதுவும் அது 591. | திசையிற் பலநர பாலர்முன்னே | | தெரிந்துரைக் குஞ்சிசு பாலன்வைத வசையில் வயப்புகழ் வாழ்த்தினவே மனுகுல தீபனை வாழ்த்தினவே. | (பொ-நி.) நரபாலர் முன்னே, சிசுபாலன் வைத, புகழ் வாழ்த்தின; குல தீபனை வாழ்த்தின; (எ-று.) (வி-ம்.)திசை-எட்டுத்திசை. நரபாலர்-அரசர். தெரிந்து - குற்றமென்று தெரிந்தும்.வைத புகழ்-புகழ்ச் செயல்களை இழிசெயலாகத் திரித்துக் கூறினன் என்க. வசை - இகழ்ச்சி. வயம் - வெற்றி. மனுகுலம் - சோழகுலம். தீபன் ்- விளங்கவைத்தவன். ஈண்டும் குலோத்துங்கன் திருமாலாகவே கூறப்பட்டுள்ளான். சிசுபாலன் கண்ணபிரானை வைத வரலாறுபாரதத்தில் காண்க. (120) |