இதுவும் அது

592.பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
       பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
     கங்கை மணாளனை வாழ்த்தினவே.

     (பொ-நி.) துறைவனை வாழ்த்தின. கரையனை வாழ்த்தின;கொழுநனை வாழ்த்தின; மணாளனை வாழ்த்தின; (எ-று.)

     (வி-ம்.) பொன்னி -காவிரி. துறைவன்-துறையையுடையவன். பொருநை
-தாமிரவர்ணி. கரையன்-கரைக்குத்தலைவன். கன்னி-கன்னியாகுமரி. கொழுநன்
-தலைவன். கங்கை-கங்கையாறு.                                  (121)