இதுவும் அது

593.ஆழிகள் ஏழுமொர் ஆழியின்கீழ்
       அடிப்பட வந்த அகலிடத்தை
ஊழிதொ றூழியுங் காத்தளிக்கும்
     உலகுய்ய வந்தானை வாழ்த்தினவே.

     (பொ-நி.)  ஆழிகள்  ஏழும்  ஆழியின்கீழ் அடிப்பட, அகலிடத்தை, காத்தளிக்கும்,  உலகுய்ய  வந்தானை  வாழ்த்தின;  (எ-று.)

     (வி-ம்.) ஆழி-கடலும் கடல்சூழ்ந்த நிலமும். ஓர் ஆழி-ஒப்பற்ற  தன் ஆணைச்சக்கரம். அடிப்பட-அடங்க.  வந்ததனக்கு  உரிமையாகக்  கிடைத்த, அகலிடம்-தமிழ் நாடு.  ஊழி-யுகம். அளிக்கும் -அருள்  செய்யும். உலகுய்ய வந்தான்-குலோத்துங்கன். பிறநாட்டிலும் தன்  ஆணையைச்  செலுத்தித் தன் நாட்டைக் காத்தான் என்க.                                     (122)