கரிகாலச் சோழனோடு ஒப்பிட்டுப் பேய்கள் வாழ்த்தியது 594. | பூப்பது மத்தன் படைத்தமைத்த | | புவியை இரண்டா வதும்படைத்துக் காப்பதும் என்கடன் என்றுகாத்த கரிகாலச் சோழனை வாழ்த்தினவே. | (பொ-நி.) "புவியை, படைத்து, காப்பதும், என்கடன் என்று" காத்த கரிகாலச் சோழனை வாழ்த்தின; (எ-று.) (வி-ம்.) பூ-பொலிவு மிகுந்த. பதுமம்-தாமரை. பதுமத்தன்: பிரமன். புவி - உலகு. இரண்டாவதும் படைத்தது மக்களை ஒழுக்கநெறிகளின் நிற்கச்செய்தது (தா.262 காண்க.) கரிகாலச் சோழன்போல் புகழ்பெற்று விளங்கினமையின் முன்னோனான அவன் பெயராலேயே கூறப்பட்டான். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படுவோன் ஆதலால் இவ்வாறு கூறினார். (123) |