வாழ்த்துக் கூறியது 595. | யாவ ரும்களி சிறக்கவே தருமம் | | எங்கும் என்றும்உள தாகவே தேவர் இன்னருள் தழைக்கவே முனிவர் செய்த வப்பயன் விளைக்கவே. | (பொ-நி.) களி சிறக்க! தருமம் உளதாக! தேவர் அருள் தவப்பயன் விளைக்க! (எ-று.) (வி-ம்.) களி- மகிழ்ச்சி. அருள் - மக்கள்மாட்டு வைக்கும் அருள். தழைக்க - பெருகுக. விளைக்க - உயிர்கட்கு நன்மை செய்வதாக. (124) |