நான்முகன் வணக்கம்

5.உகநான்கும்  பொருள்நான்கும்
     உபநிடதம்  ஒருநான்கும்
முகநான்கும்  படைத்துடைய
   முதல்வனையாம்  பரவுதுமே.
    
6.நிலநான்கும் திசைநான்கும்
     நெடுங்கடல்கள்  ஒருநான்கும்
குலநான்கும்  காத்தளிக்கும்
   குலதீபன்  வாழ்கவென்றே.

   

   (பொ-நி)  குலநான்கும்  அளிக்கும்  குலதீ்பன் வாழ்க என்று,  முகம்
நான்கும் உடைய முதல்வனைப் பரவுதும். (எ-று.)

   (வி-ம்.)  உகம்-யுகம்; ஊழிக்காலம்.  பொருள் நான்கு-அறம், பொருள்,
இன்பம்,  வீடு.  உபநிடதம்  நான்கு - இருக்கு,  யசுர், சாமம், அதர்வணம்.
முதல்வன் - பிரமன்.  நிலநான்கு - குறிஞ்சி,  முல்லை,  மருதம், நெய்தல்.
அளித்தல் - அருள்  செய்தல்.  குலதீபன் - குலோத்துங்கன். குலஞ்சிறந்து
விளங்க  நின்றமையின்  குலதீபன்  என்றார்.  ஈண்டும்  ஆட்சிப் பரப்புக்
குறிக்கப்பட்டது.