கூந்தலியல்பு கூறி விளித்தது 60. | களப வண்டலிடு கலச கொங்கைகளின் | | மதிஎ ழுந்துகனல் சொரியுமென்று அளக பந்திமிசை அளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ . |
(பொ-நி.) கொங்கைகளின் மதி கனல் சொரியுமென்று; அளிகள் அளகபந்திமிசை பந்தரிடும் அரிவைமீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) களபம் - கலவைச் சாந்து. கலசம்-கும்பம். வண்டல் - சேறு. மதி - நிலா. கனல் சொரியும் - (பிரிந்தார்க்குத்)துன்பம் செய்யும். அளகம்- கூந்தல். பந்தி - கட்டு. அளிகள் - வண்டுகள். பந்தர் - பந்தல்; பந்தலிட்டாற்போல் கூட்டமாக வட்டமிட்டுப் பறந்துநிற்றல். அரிவை-பெண், பிரிந்தார்க்கு மதிகனலைச் சொரியுமென்று வண்டுகள் பந்தரிட்டன என்றார். (40) |