புணர்ச்சிநிலை கூறி விளித்தது

61. வாயின் சிவப்பை விழிவாங்க
     மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.

     (பொ-நி.)  விழி  சிவப்பை வாங்க, வாய் வெளுப்பை வாங்க, கலவி
யமுது அளிப்பீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) வாங்க-தான் பற்றிக்கொள்ள. தோயம்-கடல். கலவி-புணர்ச்சி. துங்கம் - மேன்மை.  விழி  சிவக்க,  உதடு வெளுக்கக்  கலவி புரிந்தமை
குறிக்கப்பட்டது.   கலவியின்   வாய்   வெளுத்தலும்,   கண்  சிவத்தலும் இயற்கையாதலான், இவ்வாறு ‘வாயின்......விழிவாங்க...வாய்வாங்க’ என நயம் படக் கூறினார்.  தோய   -  தழுவ  எனக் கொண்டு பொருளுரைப்பினும்
பொருந்தும்.                                                (41)