இதுவும் அது 62. | கூடும் இளம்பிறையில் குறுவெயர் முத்துருளக் | | கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக் காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக் கலவி விடாமடவீர் கடைதிறமின் திறமின். | (பொ-நி.) வெயர்முத்து உருள, வடம் புரள, அளகக்காடு அலைய, வளை பூசலிட: கலவிவிடா மடவீர், திறமின் திறமின். (எ-று.) (வி-ம்.) பிறை - பிறைபோன்ற நெற்றி. வெயர்-வெயர்வை. வடம்- முத்துமாலை. அளகம்-கூந்தல். குலைந்து-அழிந்து. அலைய-புரள. பூசல்- ஒலி, கலவி-புணர்ச்சி, புணர்ச்சி நிலை கூறியதாம். (42)
|