கலிங்கப் போர்ப்பாடல் கேட்குமாறு விளித்தது

63. காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
      கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
   
களப்போர் பாடத் திறமினோ.


    
(பொ-நி.) காஞ்சி  இருக்கக்  கலிங்கம்  குலைந்த   மடவீர் காஞ்சி
இருக்கக் கலிங்கம் குலைந்த போர் பாடத் திறமின்; (எ-று)

    
(வி-ம்.) காஞ்சி - இடை அணி. கலிங்கம்-(உடுத்த) உடை.  குலைந்த-
நிலை  பெயர்ந்து  கிடந்த.  கலவி-புணர்ச்சி. கலவிக்காலத்து இடையணியும்
ஆடையும்  உலைவது  இயல்பாதலால்  இவ்வாறு நயந்தோன்றக் கூறினார்.
சென்னி-குலோத்துங்க சோழன்.  காஞ்சி-காஞ்சிபுரம். இருக்க-தங்கி இருக்க.
கலிங்கம் - கலிங்க  நாடு.  குலைந்த - அழிந்த.  போர் பாட-போரையான்
பாட.காஞ்சியும் கலிங்கமும் இரு பொருளில் வந்தன காண்க.        (43)