இதுவும் அது

64. இலங்கை எறிந்த கருணா கரன்தன்
     இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணா கரன்தன்
   
களப்போர் பாடத் திறமினோ.

     (பொ-நி.) இலங்கை  எறிந்த   கருணாகரன்  தன்  சிலையின்  வலி
கேட்பீர்,  கலிங்கம் எறிந்த கருணாகரன் தன் போர் பாடத்திறமின்; (எ-று.)

     (வி-ம்.) கருணாகரன்-கருணைக்கடலாகிய இராமன். இகல்-வலி. சிலை-
வில். கேட்பீர் - கேட்க  விரும்பும்  பெண்களே. கருணாகரன்-கருணாகரத
தொண்டைமான்.  அருளுக்கு  இருப்பிடம்  போன்றவன் என்பது பொருள்
(குலோத்துங்கன் படைத்  தலைவன்.)  களப்போர் - கலிங்கக்  களப்போர்.
கருணாகரன்: இப் பொருளில் வந்த நயம் உணரத் தக்கது.          (44)