காதல் இயல்பு கூறி விளித்தது 65. | பேணுங் கொழுநர் பிழைகளெலாம் | | பிரிந்த பொழுது நினைந்துஅவரைக் காணும் பொழுது மறந்திருப்பீர் கனப்பொற் கபாடந் திறமினோ. |
(பொ-நி.) கொழுநர் பிழைகளெலாம் பிரிந்தபொழுது நினைந்து, காணும்பொழுது மறந்திருப்பீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) பேணும் - அன்புசெய்யும். கொழுநர் - கணவர். பிரிவுத் துன்பத்தால் பிழை நினைதலும் கண்ட உவகையில் அது மறத்தலும் இயல்பாம் என்க. கனம் - மேன்மை, உயர்வு. பொன் - அழகு; பொன்னாலியன்ற. இதனைக் 'காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால், காணேன் தவறல் லவை' எனத் திருவள்ளுவர் தந்த காதலி கூற்றும் ஒப்புநோக்கத் தக்கது. (45) |