கணவரோடு பயிலுமியல்பு கூறி விளித்தது

66. வாச மார்முலைகள் மார்பி லாடமது
     மாலை தாழ்குழலின் வண்டெழுந்து 
ஊச லாடவிழி பூச லாடஉற
   வாடு வீர்கடைகள் திறமினோ.
      (பொ-நி.) முலைகள் மார்பில் ஆட, குழலின் வண்டு ஊசலாட, விழி
பூசலாட, உறவாடுவீர் திறமின்; (எ-று.)
 
    (வி-ம்.) வாசம்-மணம். மது-தேன். குழல்-கூந்தல் ஊசலாட - வந்தும்
சென்றும்  சுழல.  விழி-கண்.  பூசலாட- இரு கடைகளோடு சென்று பொர.
உறவாடுதல்-அன்பு பாராட்டுதல்.                              (46)