பிரிவாற்றா நிலைகூறி விளித்தது 68. | பொங்கு மதிக்கே தினம்நடுங்கிப் | | புகுந்த அறையை நிலஅறைஎன்று அங்கும் இருக்கப் பயப்படுவீர் அம்பொற் கபாடம் திறமினோ. |
(பொ-நி.) மதிக்கு நடுங்கி, அறையை, நிலவறை என்று, அங்கும் இருக்கப் பயப்படுவீர்; திறமின் (எ-று.)
(வி-ம்.) பொங்குதல் - நிலவு காலுதல். மதி - நிலா. அறை- படுக்கையறை. நிலவறை-நிலத்துள் அமைக்கப்பட்ட வெளிச்சமற்ற அறை. பிரிவுத் துன்பத்தால் உடல் வெம்பிப் புழுங்கலின், இங்ஙனம் கூறப்பட்டது. (48) |