கொழுநர் வரவுபார்த்திருந்த நிலைகூறி விளித்தது

69. வருவார் கொழுநர் எனத்திறந்தும்
     வாரார் கொழுநர் எனவடைத்தும் 
திருகும் குடுமி விடியளவும்
    தேயும் கபாடம் திறமினோ.
   
     (பொ-நி.)    திறந்தும்  அடைத்தும்  குடுமி  விடியளவும் தேயும்கபாடம்
திறமின்; (எ-று.)

   
 (வி-ம்.) கொழுநர் - கணவர். திருகும் - சுழலும். குடுமி -  வாயிலின்
மேற்புறத்தமைந்த    குழிவிடத்தோடு    பொருத்தப்   பெறும்   கதவின்
தலைப்பகுதி.  விடி அளவும் - இரவுப்பொழுது  நீங்கும் வரையும். தேயும்-
தேய்ந்துபோகும்.  இதனை  'தாயர்  அடைப்ப  மகளிர் திறந்திடத், தேயத
்திரிந்த  குடுமியவே'  என  வரும் முத்தொள்ளாயிரச்செய்யுளோடு (117) ஒப்பவைத்துக் கண்டு மகிழ்க.                                 (49)