ஞாயிற்று வணக்கம் 7. | பேராழி உலகனைத்தும் பிறங்கவளர் இருள் நீங்க | | ஓராழி தனைநடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே. | 8. | பனியாழி உலகனைத்தும் பரந்தகலி யிருள்நீங்கத் | | தனியாழி தனைநடத்தும் சயதுங்கன் வாழ்கவென்றே. | (பொ-நி.) இருள் நீங்க, ஆழி நடத்தும் சயதுங்கன் வாழ்க என்று, இருள்நீங்க ஓராழிதனை நடத்தும் சுடரைப் பரவுதும். (எ-று.)
(வி-ம்.) ஆழி-கடல், பிறங்க-விளங்க. ஓராழி-ஒற்றைச் சக்கரத் தேர். சுடர்- ஞாயிறு. பனி - குளிர்ச்சி. ஆழி -கடல். பரந்த-பரவிய. கலி-துன்பம், ஆழி - ஆணைச்சக்கரம். சயதுங்கன்- குலோத்துங்கன். ஈண்டும் ஆட்சிப ்பரப்புக் குறிக்கப்பட்டது. (7. 8) |