கண்ணியல்பு கூறி விளித்தது

71.பண்படு கிளவியை அமுதெனப்
     பரவிய கொழுநனை நெறிசெயக்
கண்கொடு கொலைசெய அருளுவீர்
   கனகநெ டுங்கடை திறமினோ.
  
    (பொ-நி) அமுதெனப்  பரவிய கொழுநனை நெறிசெயகொலை செய
அருளுவீர் திறமினோ; (எ-று.)


    (வி-ம்.)  பண் - இசை. கிளவி - சொல். பரவிய-புகழ்ந்த. கொழுநன்-
கணவன். நெறிசெய - (உங்கள்)வழிப்படுத்த. கொடு-கொண்டு. கொலைசெய
அருளுவீர்  -  கொலைபுரிய   விரும்புபவர்களே.   தங்களைப்  புகழ்ந்த
கணவரைக்  கண்பார்வையால்  வாட்டினர்  என்க.   தம் கண்பார்வையா
லவர்தம்  கணவரை  வயப்படுத்தி  அவர்  நெஞ்சம்  நெக்குருகி  நிற்கச்
செய்தலை, ‘கொலை செய அருளுவீர்' என இறும்பூதுகொள்ள உரைத்தார்.
நெறிசெய்தலாவது தீய நெறியாகிய பரத்தை வழியிற் செல்லாது உம்மையே
பற்றி நிற்கச் செய்தல்.                                        (51)