குலோத்துங்கனோடு ஒப்பித்து விளித்தது

73. நக்காஞ் சிக்கும் வடம லைக்கும்
     நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு 
அக்கா னகத்தே உயிர்பறிப்பீர்
   அம்பொற் கபாடம் திறமினோ.

    (பொ-நி.)  காஞ்சிக்கும்  வடமலைக்கும்  நடுவே  வேடனை  விட்டு,
கானகத்தே உயிர் பறிப்பீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) நக் காஞ்சி - சிறந்த மேகலை;  காஞ்சி  நகரம். வட மலை-
மாலை  அணிந்த கொங்கைகள்; இமயமலை. நடுவில்-நடுவிடத்தே எனவும்,
நடுவுஇல்  நடுஇடம்  இல்லாத எனவும் இருபொருள் நயங் காண்க. வெளி-
இடுப்பு;  போர்க்களம்.  வேடனை - வேள்தனை -மன்மதனை; வேடனைப்
போன்ற  கருணாகரனை.  கானகத்தே - கான்நகத்து;  மணம் பொருந்திய
மலைபோன்ற கொங்கைகளால். கானகத்தே-காட்டையடுத்த விடத்தே. (53)