மனங்கவரும் இயல்பு கூறி விளித்தது

74. செக்கச் சிவந்த கழுநீரும்
     செகத்தில் இளைஞ ராருயிரும்  
ஒக்கச் செருகும் குழன்மடவீர்
   உம்பொற் கபாடம் திறமினோ.

     (பொ-நி.) கழுநீரும், இளைஞர் ஆருயிரும் செருகும் குழல் மடவீர், திறமின்; (எ-று.)

     (வி-ம்.) செக்கச் சிவந்த-மிகச் சிவப்பான. கழுநீர்-கழுநீர்ப்பூ. செகம்-
உலகம். குழல்-கூந்தல். பொன்-அழகு.                          (54)