தோற்றுவாய்

75. களப்போர் விளைந்த கலிங்கத்துக்
     கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
உளப்போர் இரண்டு நிறைவித்தாள்
   உறையும் காடு பாடுவாம்.

      (பொ-நி.)  கலிங்கத்து,  நிணக்கூழ்  போர்  இரண்டு நிறைவித்தாள்
உறையும் காடு பாடுவோம்; (எ-று.)

     (வி-ம்.)  களம்  - போர்க்களம்.  நிணம் - கொழுப்பு.  உளப்போர்
இரண்டு-உள் அ போர் இரண்டு. உள் வயிற்றினுள். போர்-பொந்து (போர்-
போரை; பொந்து) நிறைவித்தாள்-நிறைவித்த காளி. உறையும்-இருக்கின்ற. (1)