காட்டின் இயல்பு கூறியது 76. | பொரிந்த காரை கரிந்த சூரைபு | | கைந்த வீரையெ ரிந்த வேய் உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. |
(பொ-நி) காரை, சூரை, வீரை, வேய், பாரை, பாலை, ஓமை கலந்த; (எ-று.) (வி-ம்.) பொரிந்த-பொரிபொரியாய்ப் போன. உரிந்த- பட்டை உரிந்த. எறிந்த - முறிந்த. கலந்த - கலந்தன. காரை சூரை வீரை முதலிய மரங்கள் பொரிந்தும் கரிந்தும் புகைந்தும் எறிந்தும் போயினவெனின் அப்பாலையின் வெம்மையைப் பற்றிக் கேட்கவேண்டாவென்க. (2) |