| இதுவும் அது | 77. | உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ | | | டுங்கு துள்ளியு லர்ந்தவேல் பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப ரந்தவே. | (பொ-நி.) வெள்ளில், நெல்லி, துள்ளி, வேல், முள்ளி, வள்ளி, கள்ளி பரந்த; (எ-று.) (வி-ம்.) உதிர்ந்த - இலை உதிர்ந்த. வெள்ளில் - விளாமரம். உணங்குதல் - உலர்தல். ஒடுங்குதல் - வளராது குறுகுதல். துள்ளி -ஒரு வகை முட்செடி. வேல் - கருவேல், வெள்வேல் மரங்கள். பிதிர்தல் - பிளத்தல். முள்ளி - முள்ளிச்செடி. வள்ளி - வள்ளிக்கொடி. கள்ளி கொடிக்கள்ளி, திருகுகள்ளி முதலியன. பரந்த-பரவியிருந்தன. (3) |