இதுவும் அது 78. | வற்றல் வாகைவ றந்த கூகைம | | டிந்த தேறுபொ டிந்தவேல் முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. | (பொ-நி.) வாகை, கூகை, தேறு, வேல், ஈகை, தண்டு, புன்கு நிறைந்த; (எ-று.) (வி-ம்.) வறந்த - நீர்வற்றிய. கூகை - ஒருவகைக் கிழங்குக் கொடி. மடிந்த - அழிந்த. தேறு - தேற்றாமரம். முற்றுதல் - முதிர்தல். ஈகை- இண்டங்கொடி. முளிதல் - உலர்தல். விண்டு - மூங்கில். முரிதல்-ஒடிதல். புன்கு-புன்கமரம். நிரைந்த-வரிசையாக இருந்தன. (4) |