நிலஇயல்பு கூறியது

79. தீய வக்கொடிய கான கத்தரைதி
     றந்த வாய்தொறும்நு ழைந்துதன்
சாயை புக்கவழி யாதெ னப்பரிதி
    தன்க ரங்கொடுதி ளைக்குமே.

     (பொ-நி) பரிதி, சாயை புக்கவழி யாதென, தரைதிறந்த வாய்தொறும்
நுழைந்து திளைக்கும்; (எ-று.)

     (வி-ம்.)  தரைதிறந்தவாய்-வெடிப்புகள். சாயை-ஞாயிற்றின் மனைவி.
புக்கவழி-புகுந்த இடம். பரிதி-ஞாயிறு. கரம்-கை. ஒளிக்கதிர்.  திளைத்தல்-
தொழிலில்  இடைவிடாது பயிலல்.  ஒருகாலத்தில் சூரியன் மனைவியாகிய
சாயை   சூரியனை  நீங்கிச்  சென்றனள்  எனவும்  சூரியன்   அவளைப்
பலவிடங்களினுந் தேடித்திரிந்தனன் எனவும் கூறுவர்.               (5)