நிழலின்மை கூறியது

80. ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல்
     அஞ்சி அக்கடுவ னத்தைவிட்டு
ஓடு கின்றநிழல் ஒக்கு நிற்குநிழல்
   ஓரி டத்தும்உள அல்லவே.

     (பொ-நி) பருந்தின்  நிழல் ஓடுகின்ற நிழல் ஒக்கும்;  நிற்கும் நிழல்
ஓரிடத்தும் உள அல்ல; (எ-று.)

     (வி-ம்.) ஆடுகின்ற-பறத்தலால் அசைகின்ற. கடுவனம்-கொடிய காடு.
சிறை - சிறகு.   அப்பாலை  நிலத்தில்  பறக்கும்  பருந்தினுடைய  நிழல்
அந்நிலத்தின் வெம்மைக்காற்றாது ஓடுவதை ஒத்திருந்த தென்க.       (6)