இதுவும் அது

81. ஆத வம்பருகும் என்று நின்றநிழல்
     அங்கு நின்றுகுடி போனதப்
பாத வம்புனல்பெ றாது ணங்குவன
   பருகும் நம்மையென வெருவியே.

     (பொ-நி.) நின்ற  நிழல், பாதவம்  நம்மைப்  பருகும் என வெருவி,
அங்குநின்று குடிபோனது; (எ-று.)

     (வி-ம்.) ஆதவம் - வெய்யில். நின்ற - மரத்தடியில் நின்ற. அங்கு-
மரத்தடி. குடிபோனது - நீங்கிப்போயிற்று. பாதவம் - மரம்.  புனல் - நீர்.
உணங்குவன -உலர்வன. மரங்களும் தண்ணீரில்லாமையால் பட்டுப்போய்
நிழலற்று நின்றன என்க.                                     (7)