மான்கள் இயல்பு கூறியது 83. | தீயின் வாயின்நீர் பெறினு முண்பதோர் | | சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந் நாயின் வாயின்நீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. |
(பொ-நி.) நவ்வி - சிந்தை கூர, வெந்து, வந்து நாயின் வாயின் நீர் தன்னை நக்கி விக்கும்; (எ-று) (வி-ம்.) தீயின், வாய் - நெருப்பிடை. நீர்பெறினும்-நீர் கிடைப்பினும். ஆய் - ஆகி. வாயின் நீர் - வாயினின்று சொட்டும் நீர். நீர்எனா- தண்ணீரெனக் கருதி. நவ்வி - மான். செந்நாயின் வாய்நீர் நக்கத் தக்கதன்றாகலின் அதனை நக்கிய மானுக்கு விக்கலுண்டாயிற்று. (9) |