| நிலத்தின் வெம்மை கூறியது | 84. | இந்நி லத்துளோர் ஏக லாவதற்கு. | | | எளிய தானமோ அரிய வானுளோர் அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித்து அல்ல வோநிலத்து அடியி டாததே. |
(பொ-நி.) வானுளோர் அடி இடாதது வெம்மையைக் குறித்தல்லவோ; நிலத்துளோர் ஏகல் ஆவதற்கு எளிய தானமோ? (எ-று.) (வி-ம்.) ஏகல் ஆவது -ஏகுவது. தானம்-இடம். வானுளோர் -தேவர். நிலத்து அடியிடாதது - பூமிமீது தம் கால்களை வைக்காமல் இருப்பது. கடவுளர்களின் கானிலந்தோயாமைக்குக்காரணம் இப்பாலை நிலத்தின ்கொடுமையே என ஆசிரியர் ஒரு புதுமையான காரணத்தைக் கூறுகிறார்.(10) |