இதுவும் அது

85.இருபொழுதும் இரவிபசும் புரவிவிசும்பு
     இயங்காதது இயம்பக் கேண்மின்
ஒருபொழுதுந் தரித்தன்றி ஊடுபோ
   கரிது அணங்கின் காடென் றன்றோ.

     (பொ-நி.) புரவி இயங்காதது கேண்மின்; அணங்கின் காடு ஊடுபோ கரிதென்றன்றோ? (எ-று.)

    (வி-ம்.) இரவி-ஞாயிறு. புரவி-குதிரை. விசும்பு-வானம்.  இயங்காதது-
செல்லாததன் காரணம். தரித்தல்-தங்கி இளைப்பாறல். ஊடு-நடுவே. போக
அரிது -செல்லுதல் இயலாது. அணங்கு; காளி.                     (11)