இதுவும் அது 87. | விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் | | குறித்தன்றோ விண்ணோர் விண்ணின் மைம்முகடு முகிற்றிரையிட்டு அமுதவட்ட வாலவட்டம் எடுப்ப தையோ. |
(பொ-நி.) விண்ணோர், முகில் திரையிட்டு, ஆலவட்டம் எடுப்பது, வனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ? (எ-று.) (வி-ம்.) விம்மு-மிகுதியான. விசை -வெம்மையின் வேகம். வெம்மை- வெப்பம். முகடு-உச்சி. முகில் திரை-மேகமாகிய திரை. அமுதவட்டம்-நிலா. ஆல வட்டம்-விசிறி. அமுதவட்டமாகிய ஆலவட்டம் என்க. (13) |