மரங்களின் தோற்றம் கூறியது

88. நிலம்புடைபேர்ந் தோடாமே
     நெடுமோடி நிறுத்தியபேய்
புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல்
    புகைந்துமரங் கரிந்துளவால்.

    (பொ-நி.)  நெடுமோடி  நிறுத்திய  பேய்  உயிர்ப்பனபோல்  மரம்
கரிந்துள; (எ-று.)

    (வி-ம்.) புடைபெயர்தல் - இடம்விட்டுப்  பெயர்தல். நெடு-உயர்ந்த.
மோடி - காளி.   புலம்பொடு - தனியே.   உயிர்த்தல் - மூச்சு  விடுதல்.
உயிர்ப்பனபோல் கரிந்து புகைந்து நிற்கின்றன என்க.              (14)