இதுவும் அது

89. வற்றியபேய் வாயுலர்ந்து
     வறள்நாக்கை நீட்டுவபோல்
முற்றிய நீள் மரப்பொதும்பின்
   முதுப்பாம்பு புறப்படுமே.

     (பொ-நி.) பேய்  நாக்கை  நீட்டுவதுபோல், பாம்பு, மரப்பொதும்பில் புறப்படும்; (எ-று.)

     (வி-ம்.) வற்றிய - மெலிந்த. உலர்தல் - ஈரம் புலர்தல். வறள்நாக்கு-
வறண்ட நாக்கு. முற்றிய-முதிர்ந்த. பொதும்பு-பொந்து. முதுபாம்பு - பெரிய பாம்புகள்.    மரப்பொந்திலுள்ள     பாம்புகள்      தலையைவெளியே
நீட்டிக்கொண்டு  புறப்படுதல் நீர் வேட்கையால் நாவறளப்பெற்ற  பேய்கள்
வெளியே நாக்கை நீட்டுதலைப்போல் காணப்படுகின்றன என்க.       (15)