சூறாவளியின் இயல்பு கூறியது 90. | விழிசுழல வருபேய்த்தேர் | | மிதந்துவரு நீர்அந்நீர்ச் சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். |
(பொ-நி.) பேய்த்தேர் மிதந்துவரும் நீர் ஆகும். அந்நீர் சுழல வருவதென சூறைவளி சுழன்றிடும்; (எ-று.) (வி-ம்.)பேய்த்தேர் - கானல். மிதந்துவரும் - மேலோங்கி வருகின்ற. சூறைவளி - சுழல்காற்று. கானலில் சுழி தோன்றுமாறு சுழற்காற் றடிக்குமென்க. (16) |