மணிகள் கிடத்தல் கூறியது

91. சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை
     சீத்தடிப்பச் சிதறியவப் பொடியால் செம்மை
புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும்
   போலாவேற் பொடிமூடு தணலே போலும்.

    (பொ-நி.) சூறை, சுடலைப் பொடியைச் சீத்தடிப்ப,  அப் பொடியால்
புதைந்த மணி தழலேபோலும்; போலாவேல் தணலேபோலும்; (எ-று.)

    (வி-ம்.) சிதைந்த  - உயிர்போய்ச்   சிதைந்த.  சூறை  - சூறாவளி
சுழல்காற்று. சீத்து -கிளறி. புதைந்த-மறைந்த. மணி -இரத்தினம். பொடிமூடு
தணல் - நீறு  பூத்த  நெருப்பு.  செல்வராயினார்  பிணங்களின்  மீதுள்ள
மணியணிகளைக்      கழற்றா      தொழிந்தமையின்      அம்மணிகள்
பலவிடங்களினுங்கிடந்து விளங்கலாயின.                         (17)