மூங்கில் முத்துதிர்தல் கூறியது 92. | மண்ணோடி அறவறந்து துறந்து அங்காந்த | | வாய்வழியே வேய்பொழியும் முத்தம் அவ்வேய் கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேல் கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும் |
(பொ-நி.) வேய் பொழியும் முத்தம் கண்டு இரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும்; (எ-று.) (வி-ம்.) ஓடி- வெடிப்பு ஓடி. வறந்து-வறண்டு. துறந்து பிடிப்பு நீங்கி. அங்காத்தல் - வாய்பிளத்தல். வேய்-மூங்கில். முத்தம்-முத்து. கண்ணோடி- கண்ணோட்டம் செய்து; கணுக்கள் வெடித்து. கண்டிரங்கி-கண்டு மனம் இரங்கி; கண்திரங்கி. கணுக்கள் சுருங்கி எனவும் கூறலாம். முதிர்ந்த மூங்கில்களில் முத்துக்கள் உண்டாகி வெடித்து வெளிப்படுதலை இவ்வாறு பாலைநில வெம்மைக் கிரங்கிக் கண்ணீர் சொரிவதாகக் கற்பித்தார். (18) |