இதுவும் அது

93. வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேல் முத்தம்
    வீழ்ந்தனஅத் தரைபுழுங்கி அழன்று மேன்மேற் 
பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும்
   
போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும்.

    (பொ-நி.)  கழைதெறிப்ப      வீழ்ந்தன     ஆகிய     முத்தம்
வியர்ப்புள்ளிகளே போலும், போலாவேல் கொப்புளங்கள் போலும்;
(எ-று.)

     (வி-ம்.) கழை-மூங்கில். விசை-விரைவு, தெறிப்ப-வெடிக்க. புழுங்கி-வருந்தி. புள்ளி-வியர்வைத் துளிகள், முன்பாட்டிற் கண்ணீர்த்துளிகளெனக் கற்பித்தவர் இப்பாட்டில் வியர்வைத் துளிகளாகவுங்  கொப்புளங்களாகவுங் கூறினார்.                                                  (19)