மணல் இயல்பு கூறியது

96.அணிகொண்ட குரங்கினங்கள
       அலைகடலுக்கு அப்பாலை
மணலொன்று காணாமல்
     வரைஎடுத்து மயங்கினவே.

்      (பொ-நி.) குரங்கினங்கள், கடலுக்கு மணல்  ஒன்றுகாணாமல், வரை
எடுத்து  மயங்கின; (எ-று.)

     (வி-ம்.) அணிகொண்ட - (இராவணனோடு)  போர்செய்தற்கு  எழுந்த,
அலைகடல் - அலைகளையுடைய கடல்,  பாலைமணல் - பாலை  நிலத்தின்
மணல். வரை - மலை. மயங்கின - அறிவின்மையால்  வருத்தமுற்றன.  (22)