கோயில் கடைகால் இயல்பு கூறியது 98. | வட்ட வெண்குடைச் சென்னி மானதன் | | வாளின் வாயினால் மறலி வாயிடைப் பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர் பரும ணிக்கருத் திருஇ ருத்தியே. | (பொ-நி.) மானதன் வாளின் வாயினால் பட்டமன்னர்தம் மங்கைய(ருடைய) மணி(யைக்) கரு(வாக) இருத்தி; (எ-று.) (வி-ம்.) சென்னி-சோழன். மானதன்-குலோத்துங்கன். மறலி- இயமன். பட்ட-வீழ்ந்த. பட்டமங்கையர்-பட்டத்துத் தேவியர். மணி-நகைகளிற் பதித்த இரத்தினம். திரு-அழகிய. கரு இருத்தி- அடித்தளம் அமைத்து.திருக்கரு இருத்தி என இயைக்க. புதுக்கட்டிடத்திற்குக் கடைகால் இடுங்கால் பொன் மணிகளை இடல் மரபென்க. (2) |