சுவர் இயல்பு கூறியது

99.துவர்நி றக்களிற்று உதிய ரேவலின்
      சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து
அவர்நி ணத்தொடுஅக் குருதி நீர்குழைத்து
     அவர்க ருந்தலைச் சுவர டுக்கியே.

     (பொ-நி.) உதியர் ஏவலின், எதிர்த்தவர் நிணத்தொடு, அக் குருதிநீர் குழைத்து, கருந்தலைச் சுவர் அடுக்கி; (எ-று.)

      (வி-ம்.) துவர்-சிவப்பு. உதியர்-சேரர். சுரிகை உருவி என  இயைக்க.
சுரிகை-உடைவாள். போர் முகம்-போர்க்களம். எதிர்த்தவர்-சேரநாட்டு வீரர்.
நிணம் -கொழுப்பாகிய சேறு. குருதி-செந்நீர்.  அவர் - அவ்வீரர்கள். கரும்
தலை-பெரிய தலை.                                           (3)