துர்க்கை வடிபட்ட முக்குடுமி வடிவேல் திரித்திட்டு வளைகருங் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்துக் கடாம்கவிழ்க்கும்சிறுகண் மால்யானை வீங்க வாங்கும் துடிபட்ட கொடிநுண் நுசுப்பிற்கு உடைந்து எனச் சுடுகடைக் கனலி தூண்டும் சுழல்கண் முடங்குளை மடங்கலை உகைத்துஏறு சூர்அரிப் பிணவு காக்க பிடிபட்ட மடநடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடிக்குழாம் சுற்ற ஒற்றைப் பிறைமருப்பு உடையதொர் களிற்றினைப் பெற்றுஎந்தை பிட்டுண்டு கட்டுண்டுநின்று அடிபட்ட திருமேனி குழையக் குழைத்திட்ட அணிமணிக் கிம்பு ரிக்கோடு ஆகத்த தாகக் கடம்பாடு அவிக்குள்விளை யாடுமொர் மடப்பிடியையே |