100
ஒல்கும் கொடிச்சிறு மருங்குல்கு இரங்கிமெல்
                ஓதிவண்டு ஆர்த்துஎழப்பொன்
        ஊசலை உதைந்துஆடும் அளவின்மலர் மகள்அம்மை
                உள்அடிக் கூன்பிறைதழீஇ

மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றுஇதுகொல்
                வாணிஎன் அசதிஆடி
        மணிமுறுவல் கோட்டநின் வணங்கா முடிக்குஒரு
                வணக்கநெடு நாண்வழங்கப்

பில்கும் குறும்பனிக்கூதிர்க் குடைந்துஎனப்
                பிரசநாம் ஐம்பாற்குஇனம்
        பேதையர்கள் ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
                பெடையொடு வரிச்சுரும்பர்

புல்கும் தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
                பொன்ஊசல் ஆடிஅருளே
        புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
                பொன்ஊசல் ஆடிஅருளே
உரை