101
கொன்செய்த செழுமணித் திருஊசல் அரமகளிர்
                கொண்டாட ஆடும்தொறும்
        குறுமுறுவல் நெடுநிலவு அருந்தும் சகோரமாய்க்
                கூந்தல்அம் கற்றைசுற்றும்

தென்செய்த மழலைச் சுரும்பராய் மங்கைநின்
                செங்கைப் பசுங்கிள்ளையாய்த்
        தேவதே வன்பொலிவதும் எவ்உருவு மாம்அவன்
                திருவுருவின் முறைதெரிப்ப

மின்செய்த சாயலவர் மேல்தலத்து ஆடிய
                விரைப்புனலின் அருவிகுடையும்
        வெள்ளானை குங்குமச் செஞ்சேறு நாறமட
                மென்பிடியை அஞ்சிநிற்கும்

பொன்செய்த மாடமலி கூடல் பெருஞ்செல்வி
                பொன்ஊசல் ஆடிஅருளே
        புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக்கு ஒத்தகொடி
                பொன்ஊசல் ஆடிஅருளே
உரை